பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்டுவெல் ஐயர்

33


மாகக் கூறினார். அவ்வாறே எழுபத்தேழாம் வயதில் கொடைக்கானல் மலையில் அவர் ஆவி பிரிந்தது.

ஐயர் மேனியை இடையன்குடிக்கு எடுத்துச் சென்று அவர் கட்டிய கோயிலிலே அடக்கம் செய்தார்கள். தன்னலம் கருதாது, மெய்வருத்தம் பாராது, தமிழ் நாட்டுக்காகவே ஐம்பத்து மூன்று ஆண்டுகள் அரும்பணி புரிந்து அமைதியுற்ற கால்டுவெல் ஐயர் தமிழ்த் தாயின் தவப்ப்தல்வர் அல்லரோ ?






41—4