பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

எல்லீசர்


என்னும் குறளில் உள்ள அறவாழி, பிறவாழி பதங்களை விளக்குகின்றார் எல்லீசர். பரிமேலழகர் அறவாழி என்பதற்கு அறக்கடல் பொருள் உரைத்து, "பலவேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவாக உடையனாகலின் அறவாழி அந்தணன் என்பது கடவுளைக் குறிப்பதாயிற்று“ என விளக்ககம் கூறியுள்ளார். இக்கருத்தை எல்லீசர் ஏற்றுக் கொண்டார்; ஆயினும் சமண சமயத்தார் கூறும் உரையையும் விரிவாகத் தருகின்றார். அறவாழி என்னும் பதத்திற்குத் தரும சக்கரம் பொருள் கூறுவர் சமணப்புலவர்கள். பழைய நிகண்டுகளில் அறவாழி அந்தணன்? என்னும் பெயர் அருக தேவனுக்கே உரியதாக ஆளப்பட்டிருத்தலை எடுத்துக் காட்டி எல்லீசர் ஆராய்ச்சிக்கு ஒரு தூண்டுகோல் அளிக்கின்றார்.[1]

இனிப் பிறவாழி என்னும் சொல்லுக்குப் பொருட் கடலும் இன்பக் கடலும் என்று உரை கூறினார் பரிமேலழகர். அக் கருத்தை ஆதரித்து ஆங்கிலத்தில் சில அறிஞர் மொழி பெயர்த்துள்ளார்கள்.[2] இன்னும், பிறவாழி என்பதனப் பிறவு

  1. The title அறவாழி அந்தணன் though assigned by R. C. J. Beschi in the orgsgårrá to the Supreme Being, is in all other Tamil Dictionaries given to
    அருகன்—Ellis.
  2. The Stormy seas of wealth and Sense-delights cannot be traversed except by those who cling to the feet of the Sage who is the Ocean of Righteousness,
    —V. V. S. Iyer