பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ரேனியஸ் ஐயர்


வதற்கு முன்னே ரேனியஸ் ஐயர் இலக்கணமே நன்னூலுக்கு அடுத்த வரிசையில் சிறந்து விளங்கிற்று.

தமிழில் அவர் எழுதிய வசன நூல்கள் பலவாகும். உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறம் அவரிடம் அமைந்திருந்தது. அவர் இயற்றிய வசன நூல்களில் அழகுண்டு ; இனிமையுண்டு : நிரந்துரைக்கும் நீர்மையுண்டு ; வகுத்தும் தொகுத்தும் கூறும் வனப்பும் உண்டு. 'சமயசாரம்' முதலிய நூல்களில் இப்பண்புகளைக் காணலாம்.

இத்தகைய தமிழ்த் தொண்டராகிய ரேனியஸ் ஐயரின் ஆர்வத்திற்குச் சான்றாக நெல்லை நாட்டில் இன்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. பாளையங்கோட்டையின் முகப்பிலே அமைந்து அணி செய்கின்ற[1] கிருஸ்தவக் கோயில் ரேனியஸ் ஐயரின் முயற்சியாலேயே கட்டப்பட்டது. இந்துக்களும் இஸ்லாமியரும் அதற்குப் பொருளுதவி செய்தார்கள். பாளையங்கோட்டையில் வாழ்ந்த வெங்கு முதலியார் என்ற பெருஞ் செல்வர் சிறந்த நன்கொடை வழங்கினர்.

இன்னும், இக்காலத்தில் நெல்லை நாட்டில் சிறப்புற்று விளங்கும் டோனாவூர் என்னும் ஊரை


  1. The Trinity Church was built by public subscription through the exertions of C. E. Rhenius in 1826. The expenses of lighting the Church are still met from the proceeds of land which Vengu Mudalivar presented to the Mission.
    —Tinnevelly Gazetteer P. 482.