பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரேனியஸ் ஐயர்

47


உண்டாக்கியவர் ரேனியஸ் ஐயரே. புலியூர்க்குறிச்சி என்பது அதன் பழம் பெயர். ரேனியஸ் ஐயர் அவ்வூரிலுள்ள காலியிடங்களை விலைக்கு வாங்கி அங்கே கிருஸ்தவர்களைக் குடியேற்றினார். பிரஷ்யா தேசத்தைச் சேர்ந்த பிரபு ஒருவர் கிரையத் தொகையை நன்கொடையாக அளித்தார். டோனா என்பது அவர் பெயர். அவர் வழங்கிய நன்கொடையின் சிறப்பு என்றும் விளங்கும் வண்ணம் அவ்வூருக்கு [1]டோனாவூர் என்று ரேனியஸ் பெயரிட்டார்.

ரேனியஸ் ஐயர் பிடித்த கொள்கையைச் சாதிக்கும் பெற்றி வாய்ந்தவர் ; தாம் மெய்யாகக் கண்டவற்றை வற்புறுத்தும் முறையில் இறையளவும் தளர்பவர் அல்லர். அவர் மனத்தை மாற்ற எவராலும் இயலாது. சமயக்கொள்கையில் அவருக்கும் சர்ச்சு முறைச் சங்கத்தார்க்கும் கருத்து வேற்றுமை உண்டாயிற்று. நாளடைவில் அது வேரூன்றி வலுத்தது. சங்கத்தார் பலவாறாக முயன்றும் அவரைச் சரிப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி அவரை வேலையினின்றும் விலக்கினர். அதைக் குறித்து ரேனியஸ் சிறிதும் கவலைப்படவில்லை; தனிப்பட்ட நிலையில் தம் தொண்டுகளைத் தடையின்றிச் செய்துகொண்டிருந்தார். பலர் பொருளுதவி செய்து அவரை ஆதரித்தார்கள். திருநெல்வேலிக் கிருஸ்தவ


  1. In 1827 Rhenius purchased a sité formerly known as Pooliyurkurichy with money subscribed by a devout Prussian gentleman Count Dohna of Schledin, and called it after him Dohnavur.
    —The C. M. S. in Tinnevelly P. 46.