பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ரேனியஸ் ஐயர்


சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. ரேனியஸ் ஐயரைச் சேர்ந்தவர்கள் மேல் பக்கத்தார் என்றும், சர்ச்சு முறைச் சங்கத்தார் கீழ்பக்கத்தார் என்றும் பெயர் பெற்றார்கள். கட்சி நாளுக்கு நாள் முறுகிற்று. அந்நிலையில் ரேனியஸ் ஐயரின் உடல் நலிவுற்றது. நாற்பத்தெட்டாம் வயதில் அவர் இவ்வுலகவாழ்வை நீத்தார். அவர் திறமையை அறிந்தோரெல்லாம் ஆறாத் துயருற்றனர். அவர் ஆதரவால் வாழ்ந்தோரெல்லாம் பழுமரம் இழந்த பறவை போல் பதைத்து வாடினர்.

"அனேநிகர் அன்பும் யேசுவின் அருளும்
அவனியின் பொறையும் விண்சுடரோன்
தனை நிகர் ஒளியும் மலைநிகர் வலியும்
தழைத்திட வாழ்ந்துநன் மொழியால்
கனைகழல் வேந்தர் முதலினோர்க் கறிவு
காட்டிநற் கதியினைச் சார்ந்தான்
தினையள வையம் இன்றிநற் கலைகள்
தேர்ந்த இரேனியூ சென்போன்“

என்று அவர் ஆசிரியராகிய கவிராயர் சரமகவி பாடினார்.