பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. வேதநாயகம் பிள்ளை


தமிழ் நாட்டிலே தோன்றிய நல்லியற் கவிஞருள் ஒருவர் வேதநாயகர். அவர் நகைச்சுவை நிரம்பிய நூல்களால் தமிழ் மொழியை அழகு செய்தவர். இசைத் தமிழின் பெருமையைக் கீர்த்தனங்களால் நாட்டியவர். தமிழில் நாவல் என்னும் நவீனக் கதை இயற்றுவார்க்கு நல்வழி காட்டியவர்.

இத்தகைய வித்தகர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் உள்ள குளத்தூரிலே பிறந்தார். அவர் பிறந்த குலமும், பெற்ற நலமும் ஒரு சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். [1]"கொங்குராய கோத்திரம் அதனில், வந்தவதரித்த செந்தமிழ்க் குரிசில்“ என்று அவரைப் பாராட்டினர் மகா வித்வான் மீனுட்சிசுந்தரம் பிள்ளை.

இளமையிலேயே வேதநாயகரிடம் விளங்கிய ஆங்கிலப் பயிற்சியையும், ஆன்ற பண்பினையும் அறிந்த அரசியலாளர் அவரை ஜில்லாக் கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக அமைத்தனர். அப்பணியில் அவர் காட்டிய திறமை துரைத்தனத்தாரது கருத்தைக் கவர்ந்தது; அதன் பயனகத் தரங்கம்பாடியில் முனிசீயாக அவர் நியமிக்கப்பெற்றர். அப் பணியை ஏற்று நீதி பரிபாலனம் செய்யுங்கால் உற்றார் என்றும் மற்றார் என்றும் அவர் உணர்ந்ததில்லை; கீழோர் என்றும்,


  1. நீதி நூலின் சிறப்புப்பாயிரம் - மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியது.

41–5