பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேதநாயகம் பிள்ளை


மேலோர் என்றும் கருதியதில்லை இச்சகம் பேசும் கொச்சை மாக்களுக்கு இடங் கொடுத்ததில்லை. வழக்கின் தன்மையை உள்ளவாறுணர்ந்து தீர்ப்புச் செய்வதே அவர் வழக்கம். இத்தன்மை வாய்ந்த வேதநாயகரை நீதிமான் என்று எல்லோரும் புகழ்வாராயினர்.

தரங்கம்பாடியிலிருந்து வேதநாயகர் சீர்காழிக்கு முனிசிபாக மாற்றப்பட்டார். அப்போது நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம்சேர்ந்தாற்போல் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அங்குப் போந்து சில காலம் தங்கியிருந்தார். உணர்ச்சி யொத்த அறிஞர் இருவரும் சிலநாளில் சிறந்த நண்பர் ஆயினர். அவ்வூர்ப் பெரியோர் விரும்பிய வண்ணம் மகா வித்வான் சீகாழிக் கோவை என்னும் பிரபந்தம் இயற்றினார். அக் கோவை சீர்காழிச் சிவன் கோயிலில் உள்ள வலம்புரி மண்டபத்தில் வாசித்து அரங்கேற்றப்பட்டது. வேதநாயகர் நாள்தோறும் வந்து கேட்டு இன்புற்று அக்கோவையின் நயங்களையும், பிள்ளையவர்களின் புலமைத் திறத்தையும் பாராட்டிப் பல கவிகள் பாடினர்.

நன்னெறியில் நாட்டம் உடைய வேத்நாயகர் அவ்வப்போது தம் மனத்தில் அரும்பிய கருத்துக்களைப் பாட்டாகப் பாடி வைத்திருந்தார் : அப் பாடல்களை மகா வித்வானிடம் படித்துக் காட்டி அவர் அளித்த சிறப்புப் பாயிரத்தோடு நீதிநூல் என்னும் பெயரால் வெளியிட்டார். அந் நூலில் வேதநாயகர் பரோபகாரம் முதலிய அறங்களைப்