பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை

53


இவ்வாறு,

'தொண்டை கிழித்துக் கொண்டு
சண்டை செய்யும் வக்கீல்கள்
அண்டையில் இருந்து நம்
மண்டையை உடைத்தால் -
ஆண்டவனை நினைப்ப தெப்போது நெஞ்சே
ஐயன் பதத்தை நினைப்பதெப்போது நெஞ்சே”

என்று அவர் பாடுகின்றார்.

தெய்வ சாட்சியாக நீதிபரிபாலனம் செய்து வேதநாயகர் அடைந்த பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சிறியோர் சிலர் மேலதிகாரிகளிடம் கோளும் பொய்யும் சொல்லிக் குழப்பம் விளைவித்தார்கள். அன்னார் சிறுமையை ஒரு பாட்டாகப் பாடி ஆண்டவனிடம் முறையிட்டார் வேதநாயகர். "நல்லவர்களெல்லாம் நாட்டை விட்டு அகன்றார் ; ஞான சூனியரெல்லாம் நமக்கு அதிபதி என்றார். ஆகாத காலம் இது; அசடர் தலையெடுத்தார். பூவிற்ற கடையிலே புல் விற்கத் தொடங்கி விட்டார். என்ன வந்தாலும் மனமே-ஐயன் இருக்கையில் என்ன விசனமே என்னும் கீர்த்தனம் பாடிக் கவலையற்றிருந்தார். இறுதியில் அறம் வென்றது; அழுக்காறு வேரற்று வீழ்ந்தது[1].


  1. As District Munsif, he (Vedanayagam Pillai, was very popular and discharged his duties with great credit and ability, at a time when Munsifs of the present type were rare. He was distinguished also for his independence; he once declined to put up with the treatment accorded to him by a Judge, who was then well-known for his idiosyncrasies and who is now practising in the Madras Bar.
    -The Hindu 24th July 1889.