பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. H. A. கிருஷ்ண பிள்ளை[1]


தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு மேலே நாட்டு அறிஞர் பலரைத் தமிழ்த்தொண்டராக்கிய பெருமை யுடையதாகும். இத்தாலிய தேசத்து வித்தராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிப்படை கோலியது நெல்லை நாடு. பெருந்தமிழ்த் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லைநாடு. மொழிநூற் புலமையில் தலை சிறந்த கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லே நாடே.

இங்ஙணம் பிற நாட்டு அறிஞரைத் தமிழ்ப் பணியில் உய்த்த தென்தமிழ் நாட்டில் ரெட்டியார் பட்டி என்ற சிற்றூர் ஒன்று உண்டு. அவ்வூரிலே தோன்றினார் கிருஷ்ண பிள்ளை. அவர் வேளாளர் குலத்தினர் ; வைணவ மதத்தினர். இளமையிலேயே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி அவர் நன்றாகக் கற்றார்.

அப்பொழுது நெல்லை நாட்டில் கிருஸ்தவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்து, சிறந்த சமயத் தொண்டு செய்து கொண்டிருந்தன. சர்ச்சு முறைச் சங்கத்தின் சார்பாகச் சார்சந்தர் என்னும் சீலர் சிறந்த பணி செய்தார். வேத விளக்கச் சங்கத்தின் சார்பாகக் கால்டுவெல் ஐயர் பெருந்தொண்டு


  1. Henry Alfred Krishna Pillai.