பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண பிள்ளை

65


இன்னோரன்ன உண்மைகளை உருக்கமாகப் பாடி மாந்தரையெல்லாம் நல்வழிப்படுத்த முயன்ற கிருஷ்ண பிள்ளை, எல்லாம் வல்ல இறைவனை ஊன்கரைந்து, உயிர் கரைந்து பாடிய பாடல்கள் இரக்ஷணிய மனோகரம் என்னும் நூலிற் காணப்படும். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பாடிய திருப் பாசுரங்களின் மணம் இரக்ஷணிய மனோகரத்திற் கமழ்கின்றது. இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாய் நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப் பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றோர் பாடல்களில் உள்ள ஆர்வம் இரக்ஷணியப் பாடல்களிலும் அமைந்து நம் உள்ளத்தை அள்ளுகின்றது.[1]

இங்ஙனம் கிருஸ்து நாதர் பெருமையை விளக்கும் பெருங் காவியமும், அவரைப் போற்றி மனமுருகுவதற்கேற்ற திருப் பாசுரங்களும் இயற்றித் தமிழ் நாட்டார்க்குத் தொண்டு செய்த கவிஞர் எழுபத்து மூன்றாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது நற் குடியிற் பிறந்தவர்கள் பாளையங்கோட்டையில் இன்றும் சிறந்து வாழ்கின்றார்கள்.


  1. "தந்தை யாகி உலகனைத்தும்
    தந்து மதுக்கள். தமைப்புரக்க
    மைந்த னாகிப் புனிதாவி
    வடிவாய் ஞான வரமருளிப்
    பந்த மறநின் றிலங்குதிரி யேக
    பரமன் பதாம்புயத்தை
    சிந்தையாரத் தொழு தேத்திச்
    சேர வாரும் செகத்தீரே.“
    -இரக்ஷணிய நவநீதப் படலம், ?

41-6