பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேதநாயக சாஸ்திரியார்


என்ற கருத்தடங்கிய பாட்டில் இரக்கமும் உருக்கமும் நிரம்பி நிற்கின்றன.[1]

இத்தகைய பராபரன் உலகத்தை யெல்லாம் படைத்த பான்மையை வியந்து வேதநாயகம் பாடிய பாடல் 'ஞானத் தச்சன் நாடகம்' என்னும் பெயரால் வழங்குகின்றது. ஞானத் தச்சனாகிய இறைவன் ஆதி மனிதனைப் படைத்த மேன்மையும், நோவாவின் பேழையைப் பற்றிய கப்பற் பாட்டும், பிறவும் அந் நாடகத்தில் உள்ளன.

"ஞாலத்திலே அதி காலத்திலே-மிகு
ஞானத்திலே நன்னி தானத்திலே கொண்டு சாலத்தமக்குத் தேவாலய மாகவே
தம்முடைச் சாயலாய்த் தம்முடை ரூபமாய்-
வீடு கட்டினானே ஞானத் தச்சன்
வீடு கட்டினானே'.

[2]

என்னும் பாடலைப் போன்ற நூற்றுக் கணக்கான கீர்த்தனங்கள் அந்நூலில் உண்டு.

அக்காலத்தில் சரபோஜி மன்னன் தஞ்சையில் அரசுபுரிந்தான். அவன் அருங்கலை விநோதன்; அரசாளும் பொறுப்பை ஆங்கிலக் கம்பெனியா-


  1. "நீயிருக்க வேத நெறியிருக்க நெஞ்சமுற
    வாயிருக்க நின்பதத்தில் வந்திருக்க என்மனமும் போயிருக்க நின்புதல்வன் புண்ணியனார் அன்பிருக்கத் தாயிருக்கச் சேய்க்குத் தவிப்பேன் பராபரனே”

  2. “ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
    மானத்திலே அன்ன தானத்திலே
    கானத்திலே அமுதாக நிறைந்த
    கவிதையிலே உயர் நாடு-இந்தப்
    பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
    பாரத நாடு".

    என்னும் பாரதியார் பாட்டை இதனோடு ஒப்பு நோக்குக.