பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்


1. வீரமாமுனிவர்

மேலை நாட்டு நல்லறிஞர் பலர் தமிழ் நாட்டிற் போந்து சிறந்த தமிழ்ப் பணி செய்துள்ளார்கள். அவருள் இத்தாலிய தேசத்து வித்தகர் சிலர் ; ஜெர்மானிய தேசத்தவர் சிலர் ; ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர் சிலர். அவர்களால் தமிழ் மொழி பெற்ற நன்மைகள் பலவாகும்.

ஏறக்குறைய இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய தேசத்தில் பிறந்த பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்கு வந்தார். அவர் [1] யேசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் ; இளமையிலேயே துறவறத்தை மேற்கொண்டவர். பெஸ்கி என்பது அவர் பெயர். தமிழ் உலகம் அவரை வீரமாமுனிவர் என்று போற்றுகின்றது.

தமிழ் நாட்டில் யேசு மத போதகம் செய்வதற்காகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார் வீரமாமுனிவர் ; அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாக விளங்கிய சுப்பிரதீபக் கவிராயர் முதலியோரிடம் முறையாகத் தமிழ் நூல்களை ஓதி உணர்ந்தார். திருக்குறளின்


  1. யேசுநாதர் சங்கம்-Society of Jesus (S J ) 41—2