பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகராதி ஆசிரியர்

77


சார்பாகப் பெர்சிவல் முதலிய அறிஞர் பலர் பல் காலமாகத் திரட்டிய அகராதியைப் பதிப்பிக்கும் பொறுப்பும் உரிமையும் வின்சுலோ என்னும் வித்தகர்க்கு வாய்த்தது, எடுத்த பணியைத் திறமையாக நடத்தும் மனத்திண்மை வாய்ந்த அவ்வறிஞர், அறுபத்தேழாயிரம் சொற்கள் அடங்கிய, பேரகராதியை அச்சிட முற்பட்டார்[1] அதன் செலவு, அளவு கடந்து. சென்றது. அமெரிக்க சங்கத்தார் அதன் பொறுப்பை ஏற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்று அறுபது பக்கம் அச்சிட்டு முடிந்த அளவில், அகராதி வேலை முறிந்துவிடுமோ என்ற கவலை பிறந்தது. அந் நிலையில் ஆசிரியர். வின்சுலோ சென்னை அரசாங்கத்தாரது உதவியை நாடினார். அன்னார் அகராதி முற்றுப் பெற்றவுடன், நூறு, பிரதிகள் விலை கொடுத்து வாங்குதல் கூடும் என்று வாக்களித்தனரேயன்றி முன்பணம் கொடுத்து உதவ இசைந்தாரல்லர். எடுத்த வேலையை முடிக்கும் வகையறியாது பெருங் கவலைகொண்டார் வின்சுலோ ஐயர் ; அகராதி அச்சிட்டு முடிவதற்குப் பின்னும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் : என்று கணக்கிட்டார். அத் தொகையை எவரும் கொடுக்க முற்படாமையால்


  1. This Comprehensive Tamil and English Dictionary embraces both the common and poetic dialects of the Tamil language, including its principal astronomical, astrological, mythological, botanical, scientific and official terms, as also the names of many authors: poets, heroes and gods”.
    -Preface to Winslow's Dictionary,