பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகராதி ஆசிரியர்

81


வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் இளைப்பாறக் கருதி விடுதி பெற்றார்.

அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது[1]. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் 'தமிழ் லெக்சிக்கன்' என்னும் பெயரோடு விளங்குகின்றது. நூறாயிரம் சொற்கள் அவ்வகராதியிற் காணப்படும். அப் பேரகராதியைச் சுருக்கிச் சிற்றகராதியொன்று வெளியிடும் முயற்சி இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவே நிகண்டுக் காலம் கழிந்து அகராதிக் காலம் வந்த பின்னர் தமிழ் மொழியின் சொல் வளம் பெருகி வருவது நன்கு விளங்கும். அச் சொற்களைத் தொகுக்கும் பெரும்பணியில் ஈடுபட்டு உழைத்த வீரமாமுனிவர், பாப்ரீசியர், ராட்லர், டெய்லர், வின்சுலோ, சாந்தலர் ஆகிய அறிஞர் அறுவரையும், அவருக்குத் துணைபுரிந்த புலவர் பல்லோரையும் தமிழ்நாடு என்றும் போற்றும் கடப்பாடு உடையதாகும்.


  1. The total cost of preparation and publication of the Lexicon, since its commencement: in January, 1913 has come, to .about Rs. 4,00,000.. The excess over the Government grant of Rs. 1,00,000 has been met by the University.
    -Preface to the Tamil Lexico

41-7