பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

109


பந்தயங்களில் தான் கலந்து கொள்ள வேண்டும். பரிசு பெற வேண்டும் என்ற ஆசையு வேகமும் வெறியும் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேதான் இருந்தன.

இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பறந்தோடின. கி.மு. 478ம் ஆண்டு பிதியன் பந்தயங்கள் நடந்தன அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், பயிலஸ் மீண்டும் புறப்பட்டான். ஒரு தாண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, தவறி விழுந்து காலை காயப்படுத்திக் கொண்டான். அத்துடன் அவனது பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஆசையின் சகாப்தம் முடிவு பெற்று விட்டது.

ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டுவெற்றிபெற்று, ஆலிவ் மலர் வளையம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆவல். அவன் வாழ்நாளில் கடைசிவரை நிறைவேறாமலே போய் விட்டது. பாவம்!

சுய நலத்தில் அவன் ஊறியிருந்ததால், நாடுபோனால் எனக்கென்ன என்று கூறி விட்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொண்டிருப்பான். வெற்றியும் பெற்றிருப்பான். ஆனால், பொது நலம் நிறைந்த, தியாகப் பண்புள்ள, கடமை வீரனாக இருந்ததால், அவன் நாடு காக்கும், நல் வீரனாகப் போரிட்டான். விளையாட்டுப் பந்தயங்களில் வெற்றிபுெறா விட்டாலும், வெற்றித் திருமகனாகத் திரும்பி வந்த பயிலசை, அவனது சேவையைப் புகழ்ந்து, அவனை ஏற்றுக் கொண்டு நாடே வாழ்த்தியது.

வரலாற்றில் தலையாய இடம் தந்தது. வளமான தேகம் தனி மனிதன் வாழ்க்கையை மட்டும் உயர்ந்த அல்ல, வாழ்விக்கும் நாட்டிற்கும் சேவை செய்யத்தான், என்ற இனிய மொழிக்கு என்றும் சான்றாக அல்லவா பயிலஸ் திகழ்கிறான்! நாடு காத்த தீரனுக்கு ஏடுகள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தன. அதைவிடவேறு பரிசு என்ன வேண்டும்?