பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சிலைகளுக்கு, நோய்களைத் தீர்க்கும் தெய்வ சக்தி வந்து விடும் என்ற நம்பிக்கை, அக்கால மக்களுக்கு இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் விளைவாக தியாஜனிஸ் சிலைக்கு மேலும் புகழ் வந்து குவியலாயிற்று.

நோய்களைத் தீர்த்து வைக்கும் தெய்வசக்தி நிறைந்தது நம் தியாஜனிஸ் சிலை என்று தாசஸ் நகரத்து மக்களின் நம்பிக்கையின் வேகம் பெருகலாயிற்று. அதனால் அந்தச் சிலையைத் தரிசிக்க வருபவர்களின் கூட்டமும் பெருகலாயிற்று.

பக்கதர்கள் கொண்டு வரும் காணிக்கையும் பெருகலாயிற்று, காணிக்கை நிறைந்தவுடன் அதைக் கணக்கிடவும் கண்காணிக்கவும் ஒரு நீதிபதியே நியமிக்கப்பட்டிருந்தார் என்றால் பாருங்களேன்!

ஓராண்டு காலத்தில் வசூலான காணிக்கைத் தொகையை வைத்துக்கொண்டு, தியாஜனிஸ் சிலைக்கு எவ்வாறு பெருமையும் மரியாதையும் செலுத்தலாம் என்பதையும் தீர்மானிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டிருந்தது என்றால், தியாஜனிஸ் ஒரு ஜெகதலப் பிரதாபன் என்று கூறுவதைத் தவிர, வேறென்ன கூற முடியும் வேறு எப்படி நினைக்கத் தோன்றும்?

உண்மையான உடலமைப்புள்ள, சாதாரண மனிதனாக வாழ்ந்த வீரன் ஒருவன், செத்தபிறகு தெய்வ வாழ்வு பெறுகின்ற விந்தையான கதையாக அல்லவா தியாஜனிஸ் வாழ்வு நிறைவு பெற்றிருக்கிறது. வாழ்க தியாஜனிஸ் என்று வாழ்த்துவோமாக!

அடுத்தது தியாஜனிஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்ட ஈதிமஸ் எனும் வீரனைப் பற்றிக் காண்போம்.