பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விழுந்தது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த 60 குழந்தைகளும் உள்ளேயே நசுங்கி இறந்து போகின்றனர். கிளியோமிடிஸ் திகைத்துப் போய் நிற்கிறான்.

செய்தியறிந்த அந்த ஊர்மக்கள், அவனை பிடித்துத் தாக்கிட விரட்டிக்கொண்டு ஓடிவருகின்றனர். பயந்து போன கிளியோமிடிஸ், முடிந்த வரை ஓடி இனி ஓட முடியாது என்ற நிலையில், அதீன் (Athene) எனும் கோயிலுக்குள் ஓடி நுழைந்து கொள்கிறான்.

அடைக்கலம் என்று கோயிலுக்குள் புகுந்தவன், மறைவாகப் பதுங்கிக் கொள்ள இடம் பார்க்கிறான். இடம் அமையவில்லை. அருகே ஒரு பெரிய கனமான பெட்டி ஒன்று இருப்பதைப் பார்க்கிறான்.

அதுவே அவனுக்கு, அந்த நேரத்தில் பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது.

பெட்டியைத் திறந்து அதனுள் புகுந்து மூடிக் கொள்கிறான்.

ஆத்திரத்துடன் விரட்டிக் கொண்டு வந்த அஸ்திபாலா நகரத்தினர், கோயிலுக்கு வெளியே வந்து நிற்கின்றனர். கதவு உள் தாழ்ப்பாள் போட்டிருப்பதைக் காண்கின்றனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகின்றனர்.

அவனைக் காணவில்லை என்ற கோபத்தில் பெட்டிக்குள் தான் அவன் இருக்கிறான் என்று கத்திக், கொண்டே கனத்த பெட்டியை வெகுநேரம் கஷ்டப்பட்டுத் திறக்கின்றனர். பெட்டியும் காலியாகக் கிடைக்கிறது.

என்ன ஆச்சரியம் கிளியோமிடஸ் அங்கும் இல்லை கோயிலுக்குள் நுழைந்ததைப் பார்த்தோம். வேறு எங்கே