பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கி.மு. 464ஆம் ஆண்டில் ஒலிம்பிக் பந்தய மைதானத்திற்குள் நுழைந்த தயாகரஸ், தன் மைந்தர்கள் வெற்றியைக் காண 16 ஆண்டுகள் கழித்தே வந்திருந்தான் பந்தய மைதானத்திற்கு, இரண்டு மைந்தர்களும் வெற்றிபெற்ற பிறகு, தங்களது தந்தையை தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து பொழுது, வீரமக்களைப் பெற்ற மாவீரன் தயாகரஸ் என்று எல்லோரும் வாயார வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.

இந்த பரம்பரையின் வீரம் இத்துடன் முடிந்துபோய் விடவில்லை; தயாகரசின் மூன்றாவது மகன் டோரியஸ் (Doreeus) என்பவன், பங்கராசியம் எனும் போட்டியில் கி.மு. 432 கி.மு. 428 கி.மு. 424 ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்தாற் போல வென்று, தன் தந்தையின் புகழ் வரலாற்றில் மேலும் பல இனிய வாழ்த்துக்களைச் சேர்த்தான்.

மகன்களின் வீரம் தயாகரசை பேரானந்தத்தில் ஆழ்த்தியது என்றால், தயாகரசின் மகள் பிரனிஸ் என்பவள், ஒலிம்பிக் பந்தய வரலாற்றிலே பெரும் புரட்சியையே செய்துவிட்டாள்.

பிரனிஸ் (Psrenics) என்பவளும் ஒரு ஒலிம்பிக் பந்தய வெற்றி வீரனைத் தான் மணந்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒரு அண் குழந்தை பிறந்தது. அவர்க்ள அவனுக்கு பிசிடோரஸ் என்று பெயரிட்டார்கள். அவனைக் குத்துச் சண்டை வீரனாக்கி, ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்று. வீர பரம்பரையின் பெருமையைக் காக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான் அவனது தந்தை, தன் கணவன் அகால மரணமடைந்து விடவே அவனுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை தாயான பிரனிஸ் ஏற்றுக்கொண்டாள்.

பிசிடோரசும் பந்தயத்தில் கலந்து கொள்ளும் தகுதி பெற்று விட்டான். பந்தயத்தில் நடக்கும் போட்டியில் தன் மகன் எப்படி சண்டை இடுகிறான் என்று பார்க்க வேண்டும்