பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. கடவுள்களின் கதைகள்

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் பொறுப்பாக இருப்பதால், அந்தந்தக் கடவுளுக்கு வேண்டிக் கொண்டும், விண்ணப்பித்துக் கொண்டும் காணிக்கை அளித்தால், மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதுதான் அந்த அமைதித் தூது.

தூய நீர்க்கடவுளான அன்கி, ஒருமுறை தண்ணீரால் மனித இனத்தை அழிக்க முற்பட்டபோது, மக்கள் படகு மூலம் தப்பித்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியதன்றி, உயிர்ப் பொருட்களை படைத்தார்கள். கடவுள்களும் ஈக்கள் வடிவம் கொண்டு, பறந்து வந்து அவர்கள் படைத்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்ததாக ஒரு கதை.

கடவுள்களை வணங்க, வாழ்த்த என்பதுடன் நில்லாமல், பிரார்த்தனை என்றும் காணிக்கை என்றும் வளர்ந்து, இறுதியில் வேள்வி, உயிர்ப்பலி உணவுப் படையல் என்று விரிந்து வந்தது என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலக் கட்டம் கி.மு. 1200 வது ஆண்டிலிருந்து வந்தது. என்பது நமது ஆய்வுக்கு உரிய கருத்தாகும்.

கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று பைபிள் கூறுவதையும் முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

பைபிள் குறிப்பு:

ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். முதல் அறு நாட்களில், வெளிச்சம் உண்டாக்கி, இரவு பகல்