பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

17


என்று பிரித்தார். ஆகாய மண்டலத்தை அமைத்தார். நீர்ப்பகுதியை ஒதுக்கினார். விளை பொருட்களை உண்டாக்கினார். சூரிய சந்திரர்களை, ஆகாய மண்டலத்தில் உதயமாக்கினார். கோடிக்கணக்கான உயிர்ப் பிறவிகளை உற்பத்தி செய்தார். மிருகங்களைப் படைத்தார்.

அதன்பிறகு, நமது சாயலின் படி, நமக்கொப்பாக மனிதனை உண்டாக்குவோமாக, சமுத்திர மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், காட்டு மிருகங்களையும், பூவுலகம் முழுவதையும், பூமியிலுள்ள ஊர்வன யாவற்றையும், அவர்கள் ஆளக் கடவர்கள் என்று கடவுள் சொன்னார்.

கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்.

கடவுளின் சாயலாகவே அவனைப் படைத்தார்.

இப்படி விளக்கம் தருகிறது விவிலிய நூல் ஆகவே, கடவுள்தாம் மனிதனைப் படைத்தார் என்ற செய்தியையும் அநேக மதங்களின் வேத நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், மனிதர்கள்தாம் கடவுள்களைப் படைத்தார்கள் என்ற சேதியையும் நாம் இங்கே தெரிந்து கொள்வது பயன் தரத்தக்கதாகும்.

கடவுள்கள் யார்?

மனிதர்கள் தங்களுக்கு மேற்பட்ட அதீதமான சக்திபடைத்தவைகளைக் கண்டு முதலில் பயந்தனர். பிறகு மதித்தனர். பிறகு துதித்தனர் பின்னர் அடிபணிந்து, அவைகளே கதி என்று நம்பினர். அப்படியே வழிவழியாக, மரபாக, மதமாக மாற்றிக் கொண்டனர்.

மக்கள் பயந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை; நம்பிக்கைகள் விளைவித்துத்தந்த கற்பனைகள், கற்பனைகள் வடித்துத் தந்த காட்சி அமைப்புகள்; காட்சிகளில் லயித்த மனங்கள் உற்பத்தி