பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


செய்த பெயர்கள் எல்லாம் நமக்கு இன்று ஆச்சரியத்தையே அளிக்கின்றன.

கடவுள்களை மனிதர்கள் படைத்தார்கள் என்பதிலே சுவாரசியமான செய்திகள் உண்டு. அதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், கடவுள்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுக்கும் பந்த பாசம், கோபதாபம், வேதனைகள் சோதனைகள், விவகாரங்கள் விமரிசனங்க்ள என்று நிறைய இருக்கின்றன.

நமது நாட்டிலே பரமசிவன் பார்வதி, முருகன், கணபதி, இப்படியெல்லாம் குடும்பத்தைப் பார்ப்பது போல, உலகத்திலே அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சில நாடுகளின் கடவுள்கள் பெயர்களையும் குடும்ப உறவையும் இனி காண்போம்.

1. கானான் தேசத்துக் கடவுள்கள்

1. பால் (Baal) - மழை, பனி, அறுவடைக்கான கடவுள்

2. அனாட் (Anat) - பால் கடவுளின் மனைவி காதல் கடவுள்

3. எல் (EI) - கடவுள்களின் தலைவன்

4. அஷெரா (Asherah) - எல் கடவுளின் மனைவி, கடல் தெய்வம்

5. ஷமாஷ் (Shamash) - சூரியக் கடவுள்

6. ரெஸ்கெப் (Reshef) - போருக்கும், பாதாள லோகத்துக்கும் கடவுள்.

7. டேகன் (Dagan) - பயிர்களுக்குக் கடவுள்