பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

33


பெற்றோர்கள் பேசுகின்ற கருத்துக்களும், விவரிக்கின்ற விந்தைமிகு கதைகளும், குழந்தைகளை அதிசயப்பட வைத்தன. அவர்கள் அந்தக் கடவுள்கள் பற்றியும், அவர்களின் வரலாறு பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டனர். இதனால், அடிக்கடி தங்கள் பெற்றோர்களை அதிகமாகக் கேள்விகள் கேட்டும் தொந்தரவு செய்தனர்.

இப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பங்களை மேல் நாட்டவர்க்கு வழங்கியது சபாத் (Sabbath) என்று அழைக்கப்பட்ட ஓய்வு நாள்தான் அதாவது, வாரத்தின் ஏழாவது நாள் தான் சபாத் என்பதாகும். ஆமாம் அது அனைவருக்கும் ஓய்வு நாளாகும்.

இந்த ஓய்வு நாளின்போது, யாரும் எந்த வேலையையும் செய்யக் கூடாது. அதே சமயத்தில், சும்மா உட்கார்ந்து கொண்டு சோம்பேறியாகவும் இருக்கக் கூடாது. தூங்கிக் கழிக்கவும் கூடாது.

அதற்காக அவர்கள் மேற் கொண்ட வழி முறைதான் கடவுள் ஈடுபாட்டை மிகுதியாக வளர்த்து விட்டது. அதாவது, அந்த நாள் மக்கள், ஓய்வு நாளின் போது, கடவுள் மக்களுக்காக செய்த நன்மைகள் பற்றியும் பேசி, போற்றிக் கொண்டிருக்கும் திருக்காரியங்களையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாய நெறிமுறையை, பின்பற்றினார்கள்.

பெற்றோர்களிடம் - குழந்தைகள் கேள்விகள் கேட்பதும், விளக்கம் பெறுவதும், அந்த நினைவுடனேயே கடவுளைப் பிரார்த்தனை செய்வதுமாக அந்த ஓய்வு நாள் கழியும்.

அது போலவே, பெற்றோர்களும் தாங்கள் விளக்கிய கடவுள் மகிமை செய்த இடத்தைத் திருத்தலமாகப் போற்றி, அழைத்துக் கொண்டு போய் காட்டினர். குழந்தைகளும்