பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


10. கட்டழகு வந்தக் காரணம்

பந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடுமையான சூழ்நிலையையும், கட்டுப்பாடு நிறைந்த விதிகளையும் முன் கண்டோம். அதே சமயத்தில், போட்டியாளர்களிலே உள்ள வீரர்களை வாலிபர்கள், மனிதர்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

காரணம், அவர்களுடைய உடல் வளர்ச்சியே. ஆகவே வயது வித்தியாசத்தில் அவர்களால் பிரிக்க முடியாததால், அவர்களது உடல் வளர்ச்சியை உன்னிப்பாக உணர்ந்து, ஆராய்ந்த பிறகுதான் பகுக்க முடிந்தது. இவ்வாறு உடல்திற நிலையில் கிரேக்கர்கள் வலிமையோடும். வனப்போடும் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்தோமானால், நாம் உண்மையிலேயே வியப்பில் மூழ்கி விடுவோம். கிரேக்கர்களின் வாழ்க்கைமுறை அப்படி வரை முறையோடு இருந்தது.

குறையுடலோடு பிறந்தாலும், நோயோடு தோன்றினாலும், அக்குழந்தைகள் சமூகத்திற்கும், இனத்திற்கும் இழுக்கு என்று வாளால் கொன்று புதைத்தத் தன்னிகரில்லா தமிழினம் போன்று, கிரேக்கர்களும், ஓர் உயர்ந்த முறையைக் கையாண்டார்கள்.

குழந்தை பிறந்த ஒருசில நாட்கள் கழித்து, பெற்றோர்கள் அந்நகரத்தை ஆளும் பெரியவர்களிடம் கொண்டு சென்று தங்கள் குழந்தையைக் காட்டுவார்கள். ஆய்வுக்காக வந்து