பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முழுதும் தேரோட்டப் போட்டியை நடத்திவிட்டு, எங்களை இரவு நேரத்திலே, நிலா ஒளியிலே, குத்துச் சண்டைபோட வைக்கின்றீர்களே என்று குத்துச்சண்டை வீரர்க்ள இதயம் குமுறி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மிகுந்துகொண்டே தான் வரலாயின. அதனால், ஒரே நாள் நடந்துவந்த பந்தயம் கி.மு.5-ம் நூற்றாண்டில், 5 நாள் பந்தயமாக மாறியது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இப்பந்தயங்களை அமைதியின் சின்னம் என்றே எல்லோரும் கருதினர். அதற்குரிய காலமும் பத்துமாதம் என்றே கூறினர். தங்களுக்குள்ளே ஆயிரம் வேற்றுமையும் விரோதமும் நிறைந்திருந்தாலும், பந்தயங்களை மிக மிகப் பக்தியோடும் பண்போடும் கிரேக்கர்கள் நடத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.