பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

69


பணம் வாங்கிக் கொண்டு; அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள், இந்தச் செய்தி, அதிகாரிக்குத் தெரிந்து விட்டது. அவனை அவமானப்படுத்தியதோடு மட்டுமல்ல. அவனுக்குப் பெருந்தொகை ஒன்றையும் அபராதமாகவும் விதித்தார்கள்.

இவ்வாறு குறுக்கு வழிகளைக் கையாண்டகோணல் மதி கொண்ட வீரர்களிடம், கொடுமையான முறையில் அபராதத்தை வசூலித்தார்கள். வசூலித்தத் தொகையை செலவழித்து, குற்றம் செய்த வீரர்களைப் போலவே சிலைகளை செதுக்கி, ஒலிம்பிக் பந்தயக் களத்தின் தலைவாசலிலே வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

1300 ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயம் நடந்தாலும், இவ்வாறு அபராதம் தந்து சிலை வடிவானவர்களின் எண்ணிக்கை 13பேர் தான் என்று நாம் அறியும்போது, குறுக்கு வழியை யாரும் அதிகமாக விரும்பவில்லை என்றே உணர முடிகிறது. இதுபோன்ற சிலைகளுக்கு சேன் (Zane) என்று பெயர். இவ்வாறு சிலை அடைத்ததன் நோக்கம். இத்தகைய அலங்கோலமான, அவமானகரமான சிலைகளைப் பார்க்கும் போதாவது, மற்ற வீரர்கள் மனிதப் பண்பாட்டுடனும் வீரப் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் என்று நம்பியே, அயோக்கியர்களுக்கும் இந்நாட்டினர் சிலை அமைத்தனர்.

அதிகாரிகள் மட்டும் சிலை சமைக்கவில்லை. நாட்டு மக்களும் தாங்கள் விரும்பிய வீரனுக்கு, அவன் உண்மையாக போரிட்டாலும், தவறினை இழைத்துச் சண்டையிட்டாலும் சரி, எதற்கும் கவலைப்படாமல் சிலை அமைத்தார்கள், அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தவறாகவே போட்டிகளில் போட்டியிடுவான் என்பதற்காக, தியாஜனிஸ் என்பவனை ஒலிம்பிக் பந்தயங்களிலிருந்தே பங்கு பெறாமல் நீக்கி வைத்திருந்தார்கள்