பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

71


வெற்றிபெற வேண்டும் என்று வீரமாக வந்து, அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னும், நாளைக்குக் குத்துச் சண்டைப் போட்டி உண்டு என்று அறிந்ததும் இரவோடு இரவாக ஒலிம்பியாவை விட்டே ஓடிவிட்டான் என்றும், அவன்பெயர் சாராபியன் என்றும் ஓர் சரித்திரக் குறிப்புக் கூறுகின்றது.

ஆகவே, கோழையான வீரர்களும்கூட அக்கூட்டத்திலே இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது.

போட்டியிலே கலந்துகொள்ள வந்துவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் பின் வாங்கக்கூடாது. இந்த விதியை மீறினால், 1500க்கு மேற்பட்ட ரூபாய்களை அவர்கள் அபராதமாகக் கட்டவேண்டும். அவனால் அபராதத்தைச் செலுத்த முடியவில்லை என்றால் அவனிருக்கின்ற நகரம் அந்தப் பணத்தைக் கட்டவேண்டும். நகரத்தினரும் கட்ட மறுத்தால், ஒலிம்பிக் பந்தயத்திலிருந்தே அந்நகரம் ஒதுக்கி வைக்கப்படும் என்ற விதி கடுமையாகப் பின்பற்றப் பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும், நாட்டின் புகழ் மிக்க நாயகர்களாக விளங்கினர் அவர்கள் இறந்துபோன பிறகுங்கூட சிறு தெய்வங்கள் பெறுகின்ற வழிபாட்டினைப்போல, வழிபாட்டையும் வணக்கத்தையும் மக்களிடமிருந்து பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரன் வசிக்கின்ற நகரம் அல்லது அவன் வாழ்கின்ற நகர எல்லை முழுவதும் கடவுள்களின் பெருங்கருணை எப்பொழுதும் பொழிகின்ற நிலமாக விளங்கும் என்பது மக்களின் நம்பிக்கை, புனித ஆலிவ் மலர் வளையத்தோடு தான் பிறந்த நகரத்திற்கு வருகின்ற வீரனை, அந்நகர மக்களே ஆரவாரத்துடன் வரவேற்பு தந்து வாழ்த்துரைப்பார்கள் அவர்கள் தரவில்லையென்றாலும்கூட