பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

77


16 கிரேக்க பந்தயங்களின் வீழ்ச்சி

உதயமாகி, ஒளிதந்து, உலகைக் காத்து, ஓப்பற்ற மகிழ்ச்சியில் மக்களை ஆழ்த்திய சூரியன், ஒளி குறைந்து உலகைவிட்டே மறைந்து போவதுபோல், கற்பனையில் காணுகின்ற இன்பங்கள் அனைத்தையும் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தி, காட்சியாக்கி, மாட்சிமை நிறைந்த மனிதகுலத்தின் சக்தியை மன்பதைக்கு, வெளிப்படுத்திக் களித்த கிரேக்க மக்களுக்குக் காலம் கடும் சோதனையைக் கொடுத்தது.

அருகே இருந்த ரோமானிய சாம்ராஜ்யம் புகழிலும், பெருமையிலும், வலிமையிலும், வாழ்க்கைத் தரத்திலும், நாகரிகத்திலும் மேம்பாடடையத் தொடங்கிய போது கிரேக்க நாடு பீடிழந்தது. பெருமையிழந்தது. ஆமாம். கிரேக்கர்களை வென்று, ரோமானியர்கள் ஆளத் தொடங்கினர். நாட்டின் சரித்திரப் பெருமை சிறப்பாற்றல் நலியத் தொடங்கவே, மக்களின் மனதிலே மாபெரும் பெருமையுடன் உங்கலப் பொருளாய் வீற்றிருந்த விளையாட்டுக்களின் மகிமையும் நலியத் தொடங்கியது.

விளையாட்டுக்களிலே மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை நாம் அறிந்திருந்தாலும், இதோ இந்த சான்றினைப் படித்துப் பாருங்கள். விளையாட்டு வீரர்களின் திறமையைக் கேளுங்கள்.

எல்லா வீரர்களுமே, எல்லா போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றனர். போட்டியிடுகின்ற அத்தனை