பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சூழ்நிலையும் துணைதர வேண்டும். இத்தனையும் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்வத்துடன் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெற விரும்பும் ஒரு போட்டியாளனுக்கு ஆகின்ற செலவு முழுவதையும் அவனோ அல்லது அவனது குடும்பமோதான் ஏற்றுக்கொள் வேண்டியிருந்தது.

பயிற்சிக்கு மட்டுமல்ல, அவன் ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் போய் வருகின்ற செலவைக் கூட அந்தத் தனி மனிதனேதான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு, பயிற்சிக்கும் பந்தயம் நடக்கும் ஒலிம்பியாவுக்கும் போய்வர செலவழித்து, போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால், அந்த வெற்றியை ஆர்ப்பாட்டமாக, ஆனந்தத்துடன் கொண்டாட வேண்டுமென்றால், அந்தக் கொண்டாட்டத்திற்காகும் செலவைக்கூட, அவனே தான் ஏற்க வேண்டிய நிலையில் அந்நாளில் அவன் இருந்தான். இந்தச் செலவை, கஷ்டத்தை மட்டுமா போட்டியாளர்கள் நினைத்தார்கள்? இன்னும் என்னென்னமோ நினைத்தார்கள்?

தேர் ஓட்டப் பந்தயங்களில் பங்குபெறும் தேரோட்டியே தான், குதிரைகளையும் தேரையும் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்பந்தயக் குதிரைகளைப் பராமரிக்கும் செலவு எவ்வளவு ஆகும் என்பதை அனுபவிக்கும் போது தான் நமக்குப் புரியும். உயிரை வெறுத்து, தேரோட்டப் போட்டியில் பங்குபெற்று ஒருவன் வெற்றி பெற்றால், பரிசு கிடைப்பது தேரோட்டியான வீரனுக்கு அல்ல; அவனுக்குக்குதிரைகளைத் தந்த குதிரைக்குச் சொந்தக்காரனே பரிசுக்கு உரியவனாக இருந்தான். ஆகவே, இந் நிகழ்ச்சியின் கொடுமையையும் எண்ணிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் வீரர்கள்.

இவ்வளவு செலவையும் ஏற்றுக்கொண்டு, சிரமத்துடன் பயிற்சி செய்து, உயிரை துரும்பாக நினைத்துப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசு