பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இத்தனைக்கும் மேலாக, இன்னொரு நிகழ்ச்சி நடந்தது, மண்ணாளும் மன்னன் நீரோ செய்த அக்கிரமங்கள் தான் ஒலிம்பிக் பந்தயங்கள் ஒழிந்து போவதற்கே காரணமாக அமைந்தன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது தன்னிகரில்லாமல் தரணியிலே வாழ்ந்த தமிழர்களின் கொள்கை, தாயே தன் குழந்தைக்கு நஞ்சு ஊட்டினால் தடுப்பார் யார்? என்பது போல, ஆண்டவன் திருத்தலத்தோடு தொடர்புள்ள அரங்கத்தில், அருமையான விதிகளையுடைய பந்தயங்களை அரசனே மாற்றினான் என்றால், மக்கள் எப்படி மதிப்பார்கள்? ரோம் எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ என்பார்களே, அதே நீரோதான், கிரேக்கர்கள் கட்டிக் காத்த, கண்ணான கோட்டையை மண்மேடாக்கினான். அவ்வாறு அவன் என்ன செய்தான்?

நீரோ என்ற அந்த மன்னன், பந்தயத்தில் போட்டியாளனாகப் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றான்! எப்படி? அங்கேதான் மன்னனின் மாபாதகச் செயலும் அடாவடித்தனமும் அடங்கிக் கிடக்கிறது. சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நீரோ மன்னன், தன்னுடைய ஆட்சியின்கீழ் அடங்கிய கிரேக்க மண்ணிலே ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்பொழுது, தானும் பங்கு பெறுவான்.

தனக்குள்ள 5000 மெய்க்காப்பாளர்களோடு அவன் போட்டியிடுவான். போட்டியிடும் அத்தனை பேரும் மன்னனுக்கு வேண்டியவர்கள். அவர்கள் போட்டியிடுவது போல பாவனை செய்வார்கள். கடைசியாக, போட்டியில், வெல்பவன் நீரோவாகத்தான் இருப்பான். இப்படியாக எல்லாப் போட்டிகளிலும், தான் கலந்துகொண்டு அத்தனைப் போட்டி நிகழ்ச்சிகளிலும் அவனே முதலாவதாக வந்தான். தன்னைத் தவிர, வெற்றி வீரன் வேறு யாரும் இல்லை. வேறு