பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்கஒலிம்பிக் பந்தயங்கள்

91


வலிமையையும் திறமையையும் அவர்கள் பொல்லாத செயலுக்குப் புறம் போக்கிவிடாமல், நல்லவைக்ளைக் காக்க, நாட்டுக்கு உழைக்க அவர்கள் எவ்வாறு பயன்படுத்திப் புகழ் பெற்றார்கள் என்ற பேருண்மையை நாம் அறியும்போது, அவர்களின் செம்மாந்த வாழ்வின் நோக்கம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

சக்தி ஒருவரது தேகத்தில் மிக மிக, பக்தியும் பண்பாடும் மிகுதியாகும் என்பது பெரியோர்களின் கருத்தாகும். அத்தகைய பேருண்மையை வெளிப்படுத்தும் சான்றுக் கர்த்தாக்களாக அமைகின்ற வீரர்களின் கதையை அறிவதின் மூலம், புத்துணர்ச்சியும் பேரின்ப எழுச்சியும் பெறுவோம் என்ற எண்ணத்தில், இனி வீரர்கள் உலகைக் காண்போம் வாருங்கள்!