பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

95


நம் நாட்டிலே சிவபெருமானைப் போல, சகல விதங்களிலும் தலைமை பீடம் ஏற்றிருக்கும் கடவுளாக சியஸ் என்ற கடவுள் பெருமைப்படுத்தப்படுகிறார். அங்கே சீயஸ். என்ற கடவுளுக்கும், கரானாஸ் என்ற கடவுளுக்கும் தலைமை பதவி காரணமாகப் பெரும் சண்டை ஏற்பட்டதாம். அந்தப் போரில், தன் பகைவனான கரானாசைக் கொன்று வெற்றி பெற்றதற்காக, இம்மாபெரும் விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தாராம் என்று ஒரு கிரேக்க புராணம் கூறுகிறது.

இதோ இன்னொரு புராணக்கதை, கடவுளை பற்றிய நிகழ்ச்சிகள்தான் என்றாலும், அவைகளுக்கும் காலவரையரையும் வைத்திருக்கின்றார்கள்.

சுமார் கி.மு. 1253ம் ஆண்டு தலைமைக் கடவுளின் தாங்கொணா கோபத்திற்கு ஆளாகி, சாபத்தை ஏற்றுக் கொள்கிறான் ஹிராகிலிஸ் என்பவன், கடவுளுக்கு வந்தது கோபம். அவரிட்ட கட்டளையோ மிகவும் மட்டமானதாக இருந்தது. கிரேக்கத்திலுள்ள எலிஸ் என்ற இடத்திற்குச் சென்று, தவறுக்குரிய தண்டனையை அனுபவி என்பதுதான் அவரது கட்டளை.

சீற்றத்தால் எழுந்த தண்டனையை சிரமேற் கொண்டு, சொல்லொணா சோகத்துடன், எலிஸ் நகரம் செல்லுகிறான். அந்த நாட்டை ஆளும் அகஸ் என்ற மன்னனைக் காணுகின்றான். வரவேற்ற மன்னன் தந்த வேலையோ... வெட்கம்! வெட்கம்! வீரன் ஒருவன் செய்யக்கூடிய வேலையா?

மந்தை மந்தையாகக் கட்டியிருக்கும் அரண்மனைக் குதிரைலாயத்தை சுத்தம் செய்கின்ற பணி, ஹிராகிலிஸ் மனம் நொந்து போனான். கேவலமான பணிதான். கடவுளுக்குப் பணிந்தாக வேண்டுமே? என்ன செய்வது! ஒப்புக்