பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


இவ்வாறே அக்கேயர்களின் வீரதீரச்செயல்கள்யாவும் அறிஞர்களால் பாடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. நம் தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றையும் நாகரிகப் பண்பையும் அறிதற்கு எங்ஙனம் நம் சங்க இலக்கியங்களும் மற்றும் பல இடைக்கால நூல்களும் பயன்படுகின்றனவோ, அங்ஙனமே இவர்களின் உண்மை வரலாறுகளே அறிதற்கு அப்பாடல்கள் பெருந்துணை செய்கின்றன. இவர்கள் வெளிநாடு சென்று பெற்ற வெற்றிகளில் மிகவும் இன்றியமையாததாகக் குறிக்கப்படுவது டிராய் (Troy) நகரத்து மக்களோடு போரிட்டு வெற்றி கொண்டதே ஆகும். இந்நிகழ்ச்சி இலக்கியத்தில் ஆணித்தரமாக அழுந்திய வரலாறாகும்.

போர் வீரர்

அக்கேயர்கள் சோம்பேறிகளல்லர்; சுறு சுறுப்புடையவர்கள் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இத்தகையவர், சிறந்த போர் வீரர்களாய் விளங்கியிருப்பர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, இவர்கள் பெரிய வீரர்களேயாவர். இவர்கள் போரிட்ட முறையை அறிந்தால், அது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கும். வில்போர் இவர்களிடையே உண்டு. இதனோடு கற்களே எதிரிகளின் மீது எறியவும் பயின்றிருந்தனர். இது பண்டைப் போர் முறைகளில் ஒன்று என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் மதுரை மாநகர் மதிற்சுவர்ப் பொறிகளைக் குறிப்பிடுகையின் “கல்லுமிழ் கவணும்” என்று குறித்திருக்கிறார். நாம் அதை இங்குக் கவனத்திற்குக்