பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


அதற்குப் பிறகு ஹோமர் போன்ற பெருங் கவிஞர்களின் பாடல்களை மனனம் பண்ணும் பயிற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர். தெரியாத கடினமான பாடற் பொருள்கள், ஆசிரியரால் தெளிவாகவும் மிகுந்த கருத்தோடும் விளக்கப்படும். சிறிது கணிதப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

எழுத்தோடு எண்ணின்றேல் என்ன பயன் ? எண்ணும் எழுத்தும் மக்கட்குக் கண் போன்றவை அல்லவோ? ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்பது பொது மொழி ஆயிற்றே?

இவ்வாறன பொதுக்கல்விப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு வருகையில், மற்போர்ப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கூடங்களுக்கு எதினியர்களின் சிறுவர்கள் போகாமல் நிற்பதில்லை. அங்கு உடற்பயிற்சியும் இசை கலந்த நடனமும் பயில்விக்கப்பட்டு வந்தன. இவையே அன்றி அவர்களுக்குப் பல்வேறு உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களும் கற்பிக்கப்பட்டு வந்தன. உடற்பயிற்சி ஆசிரியர் தம்பால் பயின்றுவரும் மாணவர்கள் உடற்கட்டில் உரமுடையவராய்த் திகழ வேண்டும் என்னும் ஒரே நோக்கம் கொண்டு, அம்முறையில் அவர்களைப் பயிற்றுவித்து வந்தனர்.

ஏட்டுக் கல்வியிலும், உடற்பயிற்சிக் கல்வியிலும் மாணவர்கள் தம் கருத்தை நன்கு செலுத்திக் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்று அவ்வப் போது பந்தயங்களை வைத்து அவற்றில் நன்கு தேறியவர்களுக்குப் பரிசு வழங்கும் பான்மையும்