பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


அந்நாட்டில் இருந்து வந்தது. இதனால் மாணவர்கள் இவ்விரு கல்வியிலும் தம் கருத்தைச் செலுத்தி வர வாய்ப்பு ஏற்பட்டது. ஊக்கமும், உணர்ச்சியும் உடன் தோன்றின.

எளிய குடும்பத்து ஏழைப் பிள்ளைகள் தம் பதினான்காம் வயதிற்குமேல் படிக்கும் பொறுப்பைக் கைவிட்டுத் தம் பெற்றோர் மேற்கொண்டு புரியும் கைத்தொழிலை ஏற்க வேண்டிய நிலையை எய்துகின்றனர். ஆனால், செல்வக் குடியினர் தம் பிள்ளைகளைப் பதினெட்டு வயது வரை பயிலவிட்டு வைத்தனர். அதற்கு மேல் எந்தப் பிள்ளையும், செல்வர் என்றும், வறியர் என்றும் பாகு பாடின்றிப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவேண்டிய முறை கட்டாயமாக ஏதென்ஸ் நகர மக்களிடையே இருந்தது. இப்போர்ப்பயிற்சியை இரண்டு ஆண்டுகள் அவர்கள் பெறவேண்டும். செல்வச் சிறுவர்கள் பதினான்கு ஆண்டுக்குமேல் பதினெட்டு ஆண்டுவரை பெறும் கல்விப் பயிற்சியானது இசைப் பயிற்சியாகவோ அன்றிச் சித்திரம், ஓவியம் போன்ற நுண்கலைப் பயிற்சியாகவோ இருந்து வந்தது. இந்த ஏதென்ஸ் நகர மக்களின் கல்வி முறை உண்மையில் போற்றற்குரியதும் பாராட்டற்குரியதும் ஆகும்.

ஏதென்ஸ் நகர மக்கள் கையாண்ட நரம்புக் கருவி ஏழு நரம்புடையதாய் இருந்தது. புல்லாங்குழலும் அவர் போற்றி வந்த துளைக்கருவியாகும்.

தமிழர் பெரிதும் கையாண்ட யாழும் குழலும் இவர்கள் மேற்கொண்ட இசைக் கருவிகளை நினைப்பிக்கின்றன. ‘குழல் இனிது யாழ் இனிது என்ப

1218–7