பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

 எடுப்பின் பாடுபட முடியுமா? அது மிகக் கொடியது. அது செய்யும் செயல்கள் இன்ன என்பதை மணிமேகலை கீழ் வருமாறு கூறுகிறது.

ஒருவனுடைய நற்குடிப் பிறப்பும், சிறப்பும், கல்வியும் பயனின்றிப் போகும். வெட்கம் அழியும். அழகு சிதையும் என்பதாம்.

இதனால், இவர்கள் உணவில் பெருவிருப்புக் கொண்டதில் வியப்பில்லை. அடிக்கடி விருந்துணவு அயில்வர். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன இவர்கள் விருந்திற்கு மிகவும் வேண்டற்பாலன. திராட்சைச் சாறான நல்ல விலையுயர்ந்த மதுவகையும் அவ்விருந்தில் இடம் பெறும். பணியாளர்கள் விருந்தினர்க்கு வேண்டியவற்றை அவ்வப்போது படைத்த வண்ணமாய் இருப்பர். விருந்தில் பல பெருமக்கள் கலந்து கொண்டு-உடனிருந்து உண்பர். விருந்து இன்பமாக நடக்கையில் செவிக்கு இன்பம் அளிக்க இசையும் நடந்தவண்ணம் இருக்கும். நடிப்புக்கு அவ்விருந்து இடங்கொடுத்தது. ஆட்டம் ஆடுவதற்கெனவே தளங்கள் சில தயாரிக்கப்பட்டிருக்கும். நடிகர்கள் பாடல்களின் மூலம் பந்தாட்டம் ஆடி அபிநயம் புரிவர்.

உடற் பயிற்சிக்கெனச் சில பயிற்சிகளில் இவர்கள் கைதேர்ந்திருந்தனர். மற்போர், ஓட்டம், குத்துச் சண்டை, குதித்தல், கனமுள்ள பந்தினை எறிதல் முதலியன அவர்கட்கு உகந்தவிளையாட்டுக்களாகும்.