பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


கும். ஆண்மக்கள் கூடத்தில் துயில்கொள்வர். பெண்பாலார் தனித்த அறையில் கண் அயர்வர். அரண்மனைக்குப் புறத்தே தாழ்வாரமும் பரந்த வெளிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்விடங்கள் பணியாளர்களும் விருந்தினர்களும் துயில்கொள்ளப் பயன்படும். குளிப்பதற்கென்று தனித்த அறைகளும் உண்டு. இவர்கள் தூய்மையை விரும்பும் நேயர்கள். ஆதலின், தம் இல்லங்களையும் அரண்மனைளையும் நன்முறையில் அலங்கரித்து வைப்பர். அரண்மனையில் வெள்ளி, வெண்கலத்தாலான உருவங்களும், சுவர்களில் கற்சிலைகளும், தீட்டப்பட்ட ஒவியங்களும் நிறைந்து அழகுக்கு அழகு செய்து வந்தன. இதனால், கிரேக்கர்கள் ஒவியத்திலும் சிற்பத்திலும் தனியா வேட்கையுள்ளவர் என்பது அறிய வருகின்றது. இவ்வாறு தீட்டப்பட்ட செய்திகளை நம் தமிழ் நூல்களில் பார்க்கக் காணலாம். கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த உலோகப் பொருள்கள் செம்பொன்னும், வெண்பொன்னுமே என்றாலும், வெண்கலமே அவர்கள் பெரிதும் விரும்பும் உலோகமாகும். இரும்பு அவ்வளவாக அவர்களால் பயன்படுத்தப்படவில்லை.

தொழில்கள்

கிரேக்கர்கள், வாழ்வு பெரிதும் போர் புரிவதில் ஈடுபாடுடையதானாலும், இவர்கள் உழவுத்தொழிலையும் சிறப்புடையதாகவே கருதி ஆகவேண்டும்? உழுதுண்டு வாழும் வாழ்விற்கு ஒப்பானது ஒன்றுமில்லை அல்லவா?