பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


இரண்டிற்கு மிடையில் எருதுகள் பொதுப்பொருளாக நிலவுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

எந்த நாட்டிலும் எல்லாரும் செல்வர்களாய்ச் சிறக்க வாழ்ந்தனர் என்று சொல்ல முடியாது. செல்வர்கட்கு இடையில் வறியவரும் இருக்கத்தான் இருப்பர். கம்பர் முதலான புலவர் பெருமக்கள்

‘கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை ;
வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்’

என்று கூறிய கூற்றுக்கள் யாவும், அவர்கள் புலவர் உலகில், காணும் கனவும், கற்பனையுமேயன்றி வேறல்ல.

அக்கேயர்கட்கு இடையில் ஏழை எளியவர்களும் வாழ்ந்தனர் எனக்கொள்க. இவர்கள் வயிறு வளர்க்க “ வேலையின்றிப் பன்னாள் பாடுறுவதும் உண்டு. இரந்துண்டு வாழ்வோரும் எண்ணிலர் இருந்தனர். ஏழை எளியவர்கள் அடிமை வாணிகக் குழுவினரால் தூக்கிச்செல்லப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுதலும் உண்டு. இவ்வடிமைகள் பலவித இடையூறுகட்கு உட்பட்டே ஆகவேண்டும். மழையிலும் குளிரிலும் வீடுவாசலின்றி வாழவேண்டியதும், செல்வர்களின் கொடுமைகட்குக் கீழ்ப்பட்டே வாழவேண்டியதும் இவர்கள் விதியாகும்.

சமயக் கொள்கை

கிரீஸ் நாட்டுப் பழங்குடிகள் தங்கள் வழிபடு கடவுளர், பாதாள உலகத்தில் இருப்பதாக எண்ணி