பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

அருவிலை நன்கலம் அமைக்கும் கால
ஒருவழித் தோன்றியாங்கு என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆப”

அஃதாவது பொன்னும், பவழமும், முத்தும், மணியும் தாம் தாம் பிறந்த இடம் வெவ்வேறாயினும் மாலையாகச் செய்யும் இடத்து, அவை ஒன்று படுவது போல அறிஞர் பிறப்பகம் வெவ்வேறாயினும் சமயம் வந்தபோது ஒன்றாவர் அன்றே ! கிரேக்கர் சிறு சிறு இனத்தவரை ஆதரித்து அவர் கட்கு ஆவன செய்யும் உள்ளுர்த் தலைவனைப் போன்று ஒரு சிலர் கூடித் தம் அரசியல் முறைகளை அமைதியுறக் கண்காணித்தற்கு ஒரு தலைநகரை மலையின் உச்சியிலே நிறுவிக்கொண்டனர். இந்தத் தலைநகரே பாலிஸ் (Polis) என்று பெயர் பெற்றது. இதன் ஆதரவில் வாழ்ந்த மக்களின் தொகுப்பும் நகரும் சிடி ஸ்டேட் (City State) என்று அழைக்கப்பட்டன.

உள்ளுர்க் கலகம் ஏற்பட்ட காரணம் (Civil War)

உலகிலேயே இந்த சிடி ஸ்டேட் முறை மிகவும் புதுமை வாய்ந்தது. இம்முறை இக்காலத்து மாகாணப் பிரிவு போன்றது எனலாம். பெரிதும் அரசாங்கங்களில் வாழ்ந்த மக்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடங்கி வாழவேண்டிய கடமையுடையவராய்க் காணப்பட்டனர். ஆனால் கிரீஸ் நகர சிடி ஸ்டேட் மக்கள், தொகையால் சிறியவர்களாக இருந்தார்களானாலும், தம் அரசனின் கொள்ளைகளையும் கொடுமைகளையும் அறிந்தால், அவற்றைப் பொறுக்க இயலாதவர்களாய்க் கண்டிக்கும் பொறுப்