பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

 பும் கடமையும் வாய்ந்தவர்களாய் இருந்தனர். தவறு கண்ட விடத்துத் திருத்தம் செய்வது நன்மை தரத்தக்க தன்றோ  ?

இவர்கள் நாடு அரசப்பண்பின் அமைதி குலைவதாயிற்று. தற்பெருமை இழந்து தவிக்கலாயிற்று. ஒவ்வொரு சிடி ஸ்டேட்டும், அரசன் தன் மதிப்பை இழந்ததனால்தான், தானே தன் அரசியற் செயல்கள் நடத்தும் பொறுப்பை மேற்கொள்ளலாயிற்று. இதுவரை சிடி ஸ்டேட் மக்கள் பொது முறையில் சுதந்திர உணர்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்களாய் இருந்தது பற்றித் தம்தம் நாட்டுப் பற்றில் தனி சிறந்தவர்களாய் விளங்கினர். இவர்கள் சட்டத்திற்கு மாறாக நடவாமல், அதற்கு அடங்கியும் நடந்து வந்தாலும், தங்கள் தலைநகரான பாலிஸை மிகவும் நேசிக்கத் தொடங்கினாலும் தலைமை நகரினின்றும் தமக்குத் தடையுத்தரவு வருவதை மட்டும் தம் இறப்பினும் இன்னாததாக எண்ணினர். இதனால் உள்ளூர்க் கலகம் உளதாயிற்று. மேலும் ஒற்றுமை குலைக்கப்பட்டது. இவ்வாறான, குழப்பத்தால் புதியதும், இதுகாறும் இருந்ததினும், சிறந்ததுமான ஆட்சி முறையொன்றை நிலைநாட்ட வாய்ப்பு உண்டாயிற்று. ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்பது அனுபவமொழி அன்றோ ! நாட்டுப் பற்று ஏற்பட்டதும் தம் சிடி ஸ்டேட் முறைக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுவதாயின், அதன் பொருட்டுத் தம் உயிரையும்விட மக்கள் முன் நின்றனர். என்னே அவர்கட்கு நாட்டின் மீது இருந்த பற்று ! இஃதன்றோ உண்மை

1218–2