பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

 நாட்டுப்பற்று ! கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள் சிடி ஸ்டேட்டுகள் கிரீஸ் நகரில் மட்டும் தோன்றியதோடன்றி ஏகியன் தீவுகளிலும் (Aegean Islands) மேற்குக் கரையிலும், ஏஷிய மைனரிலும் (Asia Minor) தோன்றி நிலவலாயின. இதனால் சிடி ஸ்டேட்டுகள் பெருகினாற்போல், மக்கள்தொகையும் வளரலாயிற்று. கிரேக்கர்கள் எங்கு எங்குச் சென்றார்களோ, அங்கு அங்கெல்லாம் சிடி ஸ்டேட்டுகள், நிறுவப்பட்டன. அவ்வாறு தோன்றிய இடங்கள் சிசிலி (Sicily), இத்தாலி (Italy) முதலான பல இடங்களாகும். ஆனால், இவ்வாறு இவ்விடங்களில் தோன்றிய சிடி ஸ்டேட்டுகள் யாவும் முதல் முதல் தோன்றிய சிடி ஸ்டேட்டுகளுக்குக் கீழ்ப்பட்டவையல்ல. அவைத் தனிச் சுதந்தரம் பெற்றவையாகும். இவைகள் தமக்குள் தம் அரசியல் முறைகளைக் கண்காணித்து வந்தன.

இவ்வாறு பல்வேறு இடங்களில் பல்வேறு சிடி ஸ்டேட்டுகள் தோன்றிய காரணங்களால் அரசியல் முறையில் ஒரு நல்ல மாறுதல் ஏற்பட்டது. இருந்தாலும் உடனே அரசனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டுமென்ற எண்ணங் கொள்ளாமல், தம் ஆட்சியைத் தாமே நடத்தி வந்தனர். அவ்வாறு தம் ஆட்சியைத்தாமே புரிந்து வந்த மக்கள் பெரும்பாலோர் நிலபுலனுடைய உழவர்களே யாவர். இவர்கள் கையிலேதான் அரசியல் முறை அமைந்திருந்தது. வேள் ஆளர் என்பவர் பண்ணையை (நிலத்தை) ஆள்பவர்தாம். ஏழை மக்களுக்கு இவ்வரசியல் முறையில் இடம் இல்லாமற் போகவில்லை.