பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


செய்துவிடுவர். இது கொடுமையே! அதே குழந்தை நல்ல உடல் பலம் வாய்ந்ததாக இருப்பதை அறிந் தால், அது பின்னல் ஒரு சிறந்த வீரனுக விளங்க வல்லது என்பதை உணர்ந்து ஏழாண்டுகள் தாயின் வளர்ப்பில் விட்டு வைப்பர். ஸ்பார்ட்டர் தேய மாதர் கள்நல்ல உடற்கட்டும் உயரமும் படைத்தவர்கள். கிரீஸ் தேசத்தில் வேறு இடங்களில் வாழும் மாதர்களே விட ஸ்பார்ட்டா தேசத்தில் வாழும் பெண்கள் சுதந்திரம் பெற்று விளங்கியவர்கள்.

அவர்கள் தாம் ஈன்ற மக்களுக்கு வீரமும், தீரச் செயலும் உடன் ஊட்டித் தம் மக்களை நன்முறையில் வளர்த்து விடுவதில் கண்ணும் கருத்தும் வாய்ந்தவர்கள். ஈன்று புறந்தருதல் என். தலைக் கடனே’ என்றன்றே நம் தமிழ் நாட்டு வீரப் பெண் மணி ஒருத்தியும் உரைத்திருக்கின்றனள் ! இம் முறையில் ஏழாண்டுகள் வரை உயரமும் உள்ளக் கிளர்ச்சியும் அமைய வளர்க்கப்பட்ட குழந்தையை இவ்வேழாண்டுகட்குப் பிறகு, குருகுல வாசத்தின் பாருட்டுக் குருகுலப் பள்ளியில் கல்வி கற்க விட்டு வைப்பர். அங்கு இச்சிறுவனது கல்வி முன்னேற்றத்தைப் பற்றிய கலையை ஒரு முதியவர் மேற்கொண்டு கல்வி கற்பித்து வருவார். இவ்விளைஞர் கம் கிராமப் பள்ளிக்கூடத்துச் சட்டாம்பிள்ளைப் போன்றவர்.

பள்ளிக்கூடப்பிள்ளைகள் பயிற்சி பெற்ற விதம்

இந்தக் குருகுலப் பள்ளியில் இடப்பட்ட பிள்ளைகள் நாளுக்கு நாள்வயதிலும், கல்வியிலும் முதிர்ந்து வருவார் ஆதலின், அவர்கள் தம்மினும் இளைய