பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh||25|}


சிறு கூட்டத்தினர்க்கு விட்டுக் கொடுத்தனர். இவர்கள் கையாண்டுவந்த நாணயங்கள் இரும்பால் ஆனவையாகும். செல்வத்தை எவ்வகையிலேனும் தேடிக்குவித்துச் செல்வச் செருக்குடன் திரிந்தால் அச்செல்வம் இல்லாதவர் செல்வரைக் கண்டபோது பகையும் பொறுமையும் கொள்கின்றனர். செல்வர்களும் ஏழைகளை அடக்கி ஆள முற்படுகின்றனர். ஆகவே, தேவைக்கு மேல் செல்வம் இல்லாதது நல்லதன்றே! ஆகையினால், இவர்கள் செல்வத்தைச் சேகரித்து வைக்க எண்ணாததால் என்றும் நாட்டினிடத்துப் பற்றும், நியாயமும் கொண்ட உணர்ச்சியுடையவராய் இருக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஆகவே, இவர்களது ஒழுங்கு நடத்தை இவ்வாறு சிறந்த முறையில் இருந்தது. எந்நாட்டு மக்களும் இவர்களுடைய தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை அறியத்தக்க ஒற்றர்களையும் வைத்து உளவு அறிந்து வந்தனர். இவர்கள் நாட்டிற்குள் இருக்கின்ற காலங்களில் சட்டங்களுக்கு அடங்கியும், நீதிநெறி கடவாதவர் களாயும் நடந்து கொண்டனர். இவர்கள் பெற்ற ஒழுங்கு நடத்தை இவர்கள் சிறந்த போர் வீரர்கள் என்பதை நிலைநிறுத்திக் காட்டியது.

போர் முறை

ஹோமர் காலத்தில் ஒருவருக்கொருவர் தனித்து நேர்முகமாக இருந்து போரிட்டனர். ஆனால், இந்தத் தனிப்போர் முறை மாறிப் படைகள் என்னும் பெயரால், பலரும் ஒன்று சேர்ந்த தொகுதிகள் இரு புறங்களிலும் நின்று எதிர்த்துப் போரிடும்