பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


கிரேக்கர் இனத்தில் ஸ்பார்ட்டர்களே, நன்கு பழகிய போர் வீரர்களைத் தனித்து வைத்திருந்தனர். போர் வீரர்கள் சாகுபடிகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியவர்களல்லர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் குழுவினர்களினும், சீரியராக எண்ணப்பட்டு வந்தனர். இத்தகைய போர் வீரர் கூட்டத்தான், பாரசீக தேசத்து மன்னன் எக்ஸர் 6r36mo6io (King Xerxes of Persia) கிரேக்க நாட்டின் மீது’. கி. மு. 80இல் படையெடுத்தபோது எதிர்த்து எதிரிகளை அடக்கி வெற்றி கொண்டதாகும். கிரேக்கர்களுக்குத் துணையாயிருந்து இந்த ஸ்பாட்டர் போர்ப் படையேயாகும். எதினியர்கள் பெர்ஷியாவின் கடற்படைச் சாலமிஸ் (Stait of Salamis) என்னும் குறுகிய கடல் நீர் வழியில் தோற்கடித்தனர். பாரசீக மன்னனுல் விடுத்துச் செல்லப்பட்ட பட்டாளத்தைப் பொயோஷியாவில் (Boeotia) இந்த ஸ்பார்ட்டர்கள்தான் ஓடச் செய்து முறியடித்தனர். இன்னேரன்ன வெற்றி ஸ்பாட்டர்களுக்கு ஒப்புயர் வற்ற வெற்றியாகும். ஏனெனில், அதுகாறும் பாரசீகர்கள் தம்மை வெல்லக் கூடியவர்கள் எவரும் இலர் என்னும் இறுமாப்புக் கொண்டிருந்தனர். அவர்கள் தோல்வி ஸ்பார்ட்டர்களுக்குச் சீரிய வெற்றிக் கறி குறி ஆயிற்று.


4. ஏதென்ஸ் நகரின் முன்னேற்றம்

ஸ்பார்ட்டா நகர், வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வந்தது. இந்த வெற்றி வேகம் ஏதென்ஸ் நகர மக்களைப் பல்வேறு வழிகளில் இசையால்