பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

 திசை போகும் அளவுக்கு உயர்த்தி வந்தது. உழவுத் தொழிலில் முதன் முதலில் ஈடுபட்டு வந்த இவர்கள் கைத்தொழில் வளர்ச்சியிலும் கருத்தைச் செலுத்தி வந்தனர். இவர்கள் மேற்கொண்ட கைத்தொழில் மட்பாண்டம் செய்தல், சிறந்ததாக எண்ணப்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்தாதுப் பொருள்கள், வன்மை மிக்க போர்க்கப்பல் செய்யப்பயன்பட்டன. இதனால் செய்யப்பட்ட போர்க்கலனே பாரசிகர்களின் கடற்படையை முறியடித்தற்குத் துணையாக இருந்தது. கைத்தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து நன்னிலை அடையவே, வாணிபத்துறையில் உள்ள மக்கள் பெருநிலக்கிழவர்களுடன், எல்லாப் படியாலும், ஒப்பான தகுதி பெறும் உரிமையோடு நின்றனர். இந்த முறையில் ஏதென்ஸ் நகரில் குடியரசு வளர்ந்து வருவதாயிற்று.

எதினியர்கள் தாம் விடுதலே பெற்றமைக்கும், பாரசீகர்களை வென்று வெற்றி கொண்டமைக்கும், பெரிதும் மகிழ்வும் பெருமையும் கொண்டனர். இதனால். தம் அரசாட்சியை .இன்னமும் பரவச் செய்ய எண்ணங்கொண்டனர். ஏகியன் கடற்கரை ஒரமாக உள்ள சில சில தீவுகளும், பட்டினங்களும் பாரசீகர்களின் ஆளுகையின்கீழ் இருந்தன. இந்த ஆளுகையினின்றும் அவற்றை மீட்பதற்கு முயன்றனர். மேற்கூறிய தீவுவாசிகளும், பட்டினவாசிகளும் ஏதேன்ஸ் மக்களை உதவுமாறு வேண்டினர். இவ்வேண்டுகோளுக் கிணங்கிய ஏதென்ஸ் மக்கள்