பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
30


டிலோஸ் (Dleos) என்னும் தலைநகரில், தீவுகளில், பட்டினங்களில் வாழ்பவர்களுக்கெல்லாம் நலன் பல புரியும் கழகம் ஒன்றை நிறுவினர். ஒருவர் செய்யும் காரியத்திலும் பலர் கூடி அக்காரியத்தைப் புரிதல் நல்லமுறையாகும். இதன்பொருட்டே கழகம், சங்கம், மன்றம் முதலியன தோன்றலாயின. இஃது ஒவ்வொரு துறைக்கும் அமைந்து பல நலனை ஆற்றலாம் அன்றோ? இக்காலத்திலும் சங்கங்களை அமைத்து நலனை அடைந்து வருதல் கண்கூடன்றோ? மேற்சொல்லப்பட்ட அத்தகைய சங்கமொன்றை இம்மக்களுக்கு நிறுவித்தந்தனர். அது டெலியன் லீக் (Delian League) என்று அழைக்கப்பட்டது. பிறகு எதினியர்கள் பாரசீகரிட மிருந்து ஏகியன் கடற்கரை ஓரமாக இருந்த தீவுகளையும் பட்டினங்களையும் கைப்பற்றி, அவை சுதந்திர நாடுகளாகத் துவங்கும் நிலைக்குக் கொணர்ந்தனர். இதனால் எதினியர்கள், டைவர்ஸ் கிரிக் (Diverse Greek) பட்டினங்கள், தீவுகள் ஆகிய இவற்றிற்குத் தாமே தலைவர் என்னும் தகைமையையும் அடைந்தனர். இதனுல் டிலோஸ் தலைநகரில் இருந்த கழகத்தின் நதிய8னத்தும், கி.மு. 456-ஆம். எதினியர்களின் கைக்கு உரியதாயிற்று.

இன்னோரன்ன ஏற்பாடுகளுக் கெல்லாம், காரணர்களாய் இருந்தவர் பெரிகில்ஸ் (Pericles) எனப் பெயரினர் ஆவர். இவரே சிறந்த தலைவர் ஆயினர். இவர் வன்மையிலும் நன்னடைத்தையிலும் ஒரு சிறுதும் பின்வாங்கியவர் அல்லர்; ஆட்சித் திறத்திலும் தலைசிறந்தவர். ஆதலின், ஆட்சி முறையை