பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


பெரிகில்ஸ் தலைவர்க்குத் தம் நாடே ஏனைய நாடு களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பது வேணவா; இந்த முறையில் ஏதென்ஸ் நகரம் ஆட்சித் திறத்திலும் கலாசாரத்திலும் முன்னேற்ற முற்றுச் சிறந்து விளங்கியது.


6. குடியரசு ஆட்சி

அரசியற் செய்திகள் :

நாம் இந்தக் காலத்தில் காணும் அரசியல் நடைமுறைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. எதினிய மக்களின் அரசியல் முறை. இக்காலத்து நகர மாந்தர் அரசியல் துறையில் கலந்து பணியாற்றுகின்றனர் என்றால் நாட்டு நலத்துக்காகப் பாடுபடுவதற்கு மிகுதியாகத் தம் கடனை ஆற்றாது, தேர்தல் காலகளில் தம் வாக்கை யாருக்குப் போடுவது என்பதைப் பற்றி சிந்தனைகளில் இருப்பதும், சட்டசபையில் நடந்த விவாதங்களைப் பற்றி பத்திரிகைகளிலிருந்து படித்து அறிந்துகொள்வதுமே அன்றி வேறன்று. ஆனால், ஏதன்ஸ் நகரில் உள்ள வயது வந்தவர்கள் யாவரும், சட்டசபையில் சென்று வாக்களிக்கும் உரிமையும், உணர்ச்சியும் பெற்றிருந்தனர். ஏதென்ஸ் நகர மக்கள் வாக்குக் கொடுத்தலின் (Voting) மதிப்பை நன்கு அறிந்திருந்தனர்; அதனை வீணாகப் பயன்படுத்திலர். வாக்களிக்கும் உரிடிை அடிமைகட்கும், வெளிநாட்டினின்றும் இங்குக் குடி யேறியவர்கட்கும் மட்டும் கிடையாது. சட்டசபையில்தான் நாட்டுக்கு வேண்டிய நலன்கள் யாவும் ஆராயப்பட்டன. சட்டசபை ஏதென்ஸ் நகரவாசி