பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33

 கள் பலரும் கூடிய கூட்டமாகக் காணப்படும். சேய்மையில் வாழ்வோர் சட்டசபை நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்புப் பெறாதவர் ஆவர். அதற்குக் காரணம் அவர்கள் வரக்கூடாமையே. ஆனால், வராது நின்று விட்டால் அவர்களைச் சும்மா விடவும் மாட்டார்கள். அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவர்.

சட்டசபைக்குரிய இடம்

சட்டசபை நைஸ் (Pnys) என்னும் மலையடி வாரத்தில் சூரிய உதயத்திற்குப் பிறகு வெட்ட வெளிகளில் கூடும். இக்காலத்தைப் போலக் கட்டடத்திற்குள் கூடும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. சபை தொடங்கு முன் கடவுள் வணக்கம் நிகழும். ஒரு கரிய பன்றியையும் பலியிட்டுத் தொடங்குவர்.

இதனை நாம் உற்று நோக்கும்பொழுது எதையும் முதலில் கடவுளைத் தொழுது தொடங்க வேண்டுமென்னும் சீரிய கொள்கை கொண்டிருந்தனர் கிரேக்க இனத்தினர் என்பது தெரிகிறது. இது தொன்று தொட்ட வழக்கமாகும். நாமும், நம்முன்னோர்கள் எதைத் தொடங்கினாலும், எந்த நூலைத் தொடங்கினாலும் கடவுள் வணக்கம் கூறித் தொடங்கியதை இன்றும் அவர்கள் யாத்த நூலாலும் வரலாறுகளாலும் அறிகின்றோமல்லவா? இந்த வழக்கத்தால்தானே நாம் இப்பொழுதும், கடிதம் எழுதுவதாய் இருந்தாலும் முதலில் ‘உ’ என்னும் பிள்ளை 2ாரி சுழியை எழுதிக் கடி தந்தைத் தொடங்குகின் இரும். கிரேக்கர் கடவுள் வணக்கம் கூறிப் பலியிட்டுத் தொடங்கிய கொள்கை நற்கொள்கை

12 18–3