பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

 யாகும். பன்றியைக் கொன்று பலியிட்டதைப்பற்றி நாம் விவாதிக்கவேண்டா. நம் நாட்டிலும் சிற்சில துட்ட தேவதைகட்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வந்துள்ளனர். இப்பொழுதும் இதை நடத்தி வருகின்றனர். இது பழக்கத்தின் பாற்பட்டது; பழக்கம். கொடியது. பாறையினும் கோழி சீக்குமன்றோ?

பூமியதிர்ச்சியோ மழைப் பொழிவோ உண்டாகும் குறிகள் காணின், சட்டசபையில் வாதிக்க வேண்டியவற்றை வாதிக்கப் பல நாள் தள்ளிப் போடுவர். பின்பு கால வசதி நன்கு அமைந்த நாளொன்றில், தூதுவரை அனுப்பிப் பேச வேண்டியவரைப் பேசுவதற்காக அழைத்து வரச் செய்து மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவர். பொதுமக்களே யன்றி, அரசாங்க அலுவலாளர்களும் இதில் கலந்து கொண்டு, தம் பணியை ஆற்றுவர். கூட்டத்தில் கூச்சல் ஒன்றும் இருத்தல் கூடாது. சட்டசபுை உறுப்பினராய்வுக் குழுவினர் ஐந்நூற்றுவர் ஆவர். இவ்வளவு பெயரும் தம் தம் இருக்கைகளில் அமர்ந்திருப்பர். பேச வேண்டியவர்கள் அழைத்தபோது அவர் அங்குப் பேசுவ்தற்கு ஏற்ப்டுத்துப்பட்ட மேடையில் ஏறித் தம் கருத்தை அறிவிப்பர். பேசப்படும் பேச்சைக் கூட்டத்தினர் உற்றுக் கவனித்து கேட்பர். அப் பேச்சு நல்ல முறையில் கேட்க கேட்கச் சுவையுடையதாய் இருப்பின், சபையேர் கைதட்டுதலின் மூலம் தம் மகிழ்ச்சியை உணர்த்துவர்; இன்றேல், கூட்டத்தினிடையே சிறு குழப்பு உண்டுபண்ணுவர். நன்கு தட்டுத் தடையின்றி பேசவல்லவர் தாம் நற்பெயர் எடுக்க இயலும். பேசு