பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அமைதல் உண்டு. சொல்லால் முழக்கிளுல் சுகம் ஏற்படாது. சொல்லியவண்ணம் செய்ய முன்வர வேண்டும்.

இதுகாறும் கூறிவந்த செயல்களிலிருந்து ஏதென்ஸ் நகர மக்கள் அரசியல் காரியங்களில் தாமே தேரே கலந்துகொண்டு, தம் கருத்துக்களே அறிவிக்கும் பொறுப்புப் பெற்றவர்களாய்த் திகழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இத்தகைய பொறுப்பு வாய்ந்தவர்கள் யாதோர் ஊதியமும் ஏற்காது, தம் கடமையை நடத்தி வந்தனர். எல்லாரும் இந்த வாய்ப்புப் பெறவேண்டும் என்பதற்காக ஆண்டுக் கொருமுறை தேர்தல் நடத்தி வந்தனர். ஒரே குடிமகன் அரசியல் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடியவன் என்பது உண்மையாளுல், அவனே பல் வேறு பொறுப்புக்களை மேற்கொண்டு, நாட்டுக்கு உழைக்க வாய்ப்பு இருந்தது. ஒராண்டு முடிவுற்ற தும் தன் கடமை முடிந்து விட்டது என்று கூறு வதற்கு இல்லை; தொடர்ந்து தன் பணியை-கடனை ஆற்றலாம்.

அங்குப்பல சிறிய உள் பிரிவுகள் இருந்தன அவற்றுள் ஒன்றினில், நாட்டுக்கு நலம் புரிய, வேண்டும் என்னும் உணர்ச்சி மிக்க குடிமகன் கற்கவேண்டிய வற்றைக் கற்றுப் பயிற்சி பெற்று அரசாங்க ஆய்வுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் படலாம். அந்தக் குழுவில் ஐந்நூறு உறுப்பினர் உண்டு. அவர்கள் அப்போதைக் கப்போது நாட்டுக்கு ஆவனபற்றி ஆராய்ச்சி செய்து முடிவுகட்டுவர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழுவில்