பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44

குற்றத்திற்கேற்ப நாணய அபராதம், நாடுகடத்தல், தூக்கு, வாக்குரிமை இழத்தல் போன்ற தண்டனைகளை விதித்து வந்தனர். சிறையில் அடைக்கும் வழக்கம் ஏதென்ஸ் நகரில் இல்லை. அதற்குரிய இடம் ஏதென்ஸ் நகரில் இன்மையே ஆகும். ஏதென்ஸ் நகரத்துக்குத் தண்டனை ஒரு விசித்திரமானது. தூக்குக்குரியவனை ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பர். அவனுக்கு, தான் எப்போது தூக்கில் இடப்படுவான் என்பது தெரியாது. திடீரென ஒரு நஞ்சுப் பொருளைக் குடிக்க் ஈவர். அதைக் குடித்தவுடன் கைகால்கள் மடங்கிக் குற்றவாளி இறந்து போவான்.

கடற்படை

ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலை சிறந்தவர் என்பதை அறிவோம். அவர்கள் எங்ஙனம் தம் கட்ற்போருக்குரிய கப்பலை அமைத்துக் கொண்டனர் என்பதை அறிவது மிகவும் இன்பமானதாக இருக்கும். கப்பல் நீளமாக இருக்கும். அதில் பாய்மரமும், அதில் இணைக்கப்பட்ட ஆடையும் அமைந்திருக்கும். அஃது இயங்க வேண்டுமனால், காற்றின் உதவி பெரும்பாலும் மிக மிக இன்றிமையாததாக இருந்தது. துடுப்பைக் கொண்டு தள்ளுவர். இவ்வேலையை மேற்கொள்ளுபவர் ஏழை மக்களாகவோ அடிமை ஆட்களாகவோ இருப்பர். இவர்கள் கப்பற்றலைவன் கூறும் கட்டளைப்படி கப்பலை நடத்திச் செல்வர். இவர்கள் கப்பலை நடத்துகையில் தம் களைப்புத் தீரப் பாடிக் கொண்டே நடத்துவர். நம் நாட்டிலும் ஏற்றம்